Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
இஸ்லாமிய, இந்து, பஹாய் பார்வையில் ஈஸ்டர்
17/04/2025 Duração: 09minEaster அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சர்வதேச விமானத்திற்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு அபராதம்!
17/04/2025 Duração: 02minசர்வதேச விமானமொன்றுக்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காப்பீட்டுக் கட்டணம் Insurance ஏன் உயர்ந்துகொண்டே இருக்கிறது?
17/04/2025 Duração: 07min2024 ஆம் ஆண்டில் Insurance காப்பீட்டு நுகர்வோரின் பிரீமியம் கூர்மையான உயர்வைக் கண்டதால் காப்பீட்டு நிறுவங்களின் லாபம் உயர்ந்துள்ளதாக காப்பீட்டுத் துறையின் KPMG வருடாந்திர மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது. SBS News-இற்காக Sydney Lang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
Albanese மற்றும் Dutton இரண்டாவது முறையாக நாட்டின் முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தனர்
17/04/2025 Duração: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
கல்வி குறித்து கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன?
16/04/2025 Duração: 08minகுழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப மற்றும் உயர்நிலை பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவை குறித்து நாட்டின் முக்கிய கட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைகள் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
எந்த மாநில மக்கள் பொதுப்போக்குவரத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் அதிகம் ஏமாற்றுகின்றனர்?
16/04/2025 Duração: 02minஆஸ்திரேலியாவில் கட்டணம் செலுத்தாமல் பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தேர்தல் 2025: தமிழ் வாக்காளர்கள் கூறுவது என்ன?
16/04/2025 Duração: 12minமே 3 -ஆம் தேதி பெடரல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாட்டின் முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சிட்னி, மெல்பன், பிரிஸ்பன், அடிலெய்டு மற்றும் டார்வின் நகரங்களில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் சிலரிடம் எதிர்வரும் தேர்தலில் முக்கியமாக அவர்கள் பார்க்கும் விடயங்கள் எவை என்று கேட்டோம். வாழ்க்கைச் செலவு முதல் பூர்வீகக்குடியின மக்களுக்கான நலத் திட்டம் வரை தங்கள் எதிர்பார்ப்புகளை கூறினார்கள். அவர்களின் கருத்துகளின் தொகுப்பை அடுத்ததாக தொகுத்து வழங்குகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
16/04/2025 Duração: 07minதமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம்; விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்; தமிழகத்தில் நடந்த தாதுமணல் முறைகேடு - சிபிஐ சோதனை; சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை குறிவைத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
How to recover from floods and storms in Australia - ஆஸ்திரேலியாவில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வது எப்படி?
16/04/2025 Duração: 10minAustralia is experiencing more frequent and intense floods and storms. Once the winds calm and the water recedes, how do you return home safely? Experts speak on the essential steps to take after a disaster. - ஆஸ்திரேலியாவில் அடிக்கடி புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் பின்னணியில், வெள்ளம் வடிந்தவுடன் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வீடு திரும்புவது, மற்றும் சுத்தம் செய்வது என்ற தகவல்கள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில் இதனைத் தயாரித்தவர் Audrey Bourget: தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் எவை?
16/04/2025 Duração: 07minஆஸ்திரேலியாவில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களைக் குறிவைத்து லேபர் கட்சியும் Coalition- எதிர்கட்சி கூட்டணியும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ரஷ்ய போர் விமானங்களுக்கு இந்தோனேசியாவில் தளம்?
15/04/2025 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
கோழியை முதலைகளுக்கு இரையாக்கிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை மறுப்பு
15/04/2025 Duração: 02minஆஸ்திரேலிய வனவலங்குப் பூங்காவில் கோழியொன்றை முதலைகளுக்கு இரையாக்கிய குற்றத்திற்காக முதியவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை மறுக்கப்பட்ட செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
15/04/2025 Duração: 02minஈஸ்டர் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விண்வெளிக்கு ஆண்களின்றி தனியாக சென்று சாதனை படைத்த பெண்கள் குழு!
15/04/2025 Duração: 02minBlue Origin விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள விண்கலத்தில் சுற்றுலா சென்ற ஆறு பெண்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஈரான் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் - Trump
15/04/2025 Duração: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா?
14/04/2025 Duração: 09minWith an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா?
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன்
14/04/2025 Duração: 07min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
சிட்னி மக்களை, சித்திரைத் திருவிழாவில் மயக்க வருகிறார் புரட்சிமணி !
14/04/2025 Duração: 13minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கிராமிய இசைக்கலைஞர் புரட்சிமணி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
தேர்தல் பிரச்சாரங்கள் நடுப் புள்ளியை எட்டியது!
14/04/2025 Duração: 08minதேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் நாள் வரையான காலத்தின் நடுப்புள்ளியில் நாம் இருக்கிறோம். கடந்த இரண்டரை வாரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: செனட் (Senate)
14/04/2025 Duração: 12minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான செனட் அவையிலுள்ள செனட்டர்கள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றனர் என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.