Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 44:54:30
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது?

    22/04/2025 Duração: 08min

    In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • “பெரிய பட்ஜெட், ஹீரோ படங்களினால் நல்ல தமிழ் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது”

    22/04/2025 Duração: 15min

    திரைப்பட ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பல அடையாளங்களின் வழியே அறியப்படும் நிழல் திருநாவுக்கரசு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “நிழல்” எனும் சினிமா இதழைதொடர்ந்து நடத்தி வருகிறார். சொல்லப்படாத சினிமா, திரையிசையில் தமிழிசை, நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்று பல நூற்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்நாடு எங்கும் பல குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார். அண்மையில் 2025ம் ஆண்டுக்கான எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருதைப் பெற்ற நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • போப் பிரான்சிஸின் மறைவிற்காக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் - பிரதமர்

    22/04/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt

    22/04/2025 Duração: 06min

    'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

  • நாடாளுமன்றத் தேர்தல் 2025: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

    22/04/2025 Duração: 02min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் The Australian நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவு குறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மாற்றத்தின் முகம்: போப் பிரான்சிஸ் 1936-2025

    21/04/2025 Duração: 07min

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜிவ் காந்தி

    21/04/2025 Duração: 11min

    தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாட்டுபுற இசைக்கலைஞர் ராஜீவ் காந்தி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலிய தேர்தல் முறை அறிவோம்: Preferential Voting

    21/04/2025 Duração: 11min

    ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் Preferential Voting என்ற விருப்ப வரிசை வாக்களிப்பு முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • ஈஸ்டர் காலத்தில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டாலும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்தன

    21/04/2025 Duração: 08min

    ஈஸ்டர் காலத்தில் பிரச்சார வேலைகள் சற்று மந்தநிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நான்காவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    21/04/2025 Duração: 09min

    இந்தியாவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு - இடைக்கால உத்தரவு பிறப்பித்தது இந்திய உச்சநீதிமன்றம்; விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ள அதிமுக பாஜக கூட்டணி; பாமகவை தொடர்ந்து மதிமுகவில் உட்கட்சி பூசல் - மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்; கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி மீண்டும் போட்டி - சீமான் திட்டவட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

    21/04/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை!

    19/04/2025 Duração: 04min

    ஈஸ்டர் - இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை. வழங்குகிறார் - அருட்சகோதரி லீமா அவர்கள்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    18/04/2025 Duração: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 ஏப்ரல் – 19 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: நேஷனல் கட்சித் தலைவர் Littleproud

    18/04/2025 Duração: 07min

    'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் நேஷனல் கட்சித் தலைவர் David Littleproud பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    18/04/2025 Duração: 08min

    பிள்ளையான் கைது தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள்; சூடு பிடிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களம்; சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த வீதி விபத்துகள், கொலைகள், நீரில் மூழ்கி மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • குடிவரவு தொடர்பில் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் எவை?

    18/04/2025 Duração: 13min

    நாட்டின் குடிவரவுக்கொள்கை என்பது அனைத்து கட்சிகளாலும், தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல கொள்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் குடிவரவு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் வேலு அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஈஸ்டர் பண்டிகை தொடக்கத்தில் சிறைக் கைதிகளை சந்தித்தார் Pope Francis

    18/04/2025 Duração: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம்

    17/04/2025 Duração: 14min

    விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல அம்சங்கள் உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான திரு.போல்ராஜ் மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் திரு.கந்தையா குமாரதாசன் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: செல்வி.

  • ஈஸ்டர் சாக்லேட் விலை ஏற்றம்! காரணங்கள் என்ன?

    17/04/2025 Duração: 07min

    இது ஈஸ்டர் பண்டிகைக் காலமாகும். ஈஸ்டரின்போது, Easter Eggs போன்ற பலவிதமான சாக்லேட் தயாரிப்புகள் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் இம்முறை இவற்றின் விலைகள் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்விலையேற்றம் ஏன் நிகழ்ந்தது? இது பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • பெர்த் ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தரவுகள்!

    17/04/2025 Duração: 02min

    பெர்த்தின் முக்கிய சாலைகள் சிலவற்றில் நிறுவப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள், வாகன ஓட்டுநர்களின் ஆபத்தான நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 1 de 18