Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
14/04/2025 Duração: 09minஇந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம்; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் உறுதியானது அதிமுக- பாஜக கூட்டணி; சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு; பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் - கடும் உட்கட்சி மோதலில் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கக்கோரி சிட்னியில் பேரணி!
14/04/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
Beyond books: How libraries build and support communities in Australia - ஆஸ்திரேலியாவிலுள்ள நூலகங்கள் வழங்கும் சேவைகள் எவை?
13/04/2025 Duração: 10minAustralian public libraries are special places. Yes, they let you borrow books for free, but they also offer a wealth of programs and services, also free, and welcome everyone, from tiny babies to older citizens. - ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகங்கள் வழங்கும் பரந்த அளவிலான சேவைகள் தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
12/04/2025 Duração: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 ஏப்ரல் – 12 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
Monash IVF மையத்தின் கவனக்குறைவால் வேறொவரின் கருவை பெற்றெடுத்த பெண் - குழந்தை யாருக்கு சொந்தம்?
11/04/2025 Duração: 07minMonash IVF மையத்தில் செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சை பெற்று கொண்ட பெண் ஒருவருக்கு அத்தம்பதியினரின் கருவிற்கு பதிலாக தவறுதலாக வேறொரு தம்பதியினரின் கரு அவரின் கருப்பையில் வைக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தவறாக வைக்கப்பட்ட கருவை சுமந்து அப்பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.
-
'பீட்டர் டட்டனை குறிவைத்து பயங்கரவாத சதித்திட்டம்'-மாணவன் மீது வழக்கு
11/04/2025 Duração: 02minஎதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை குறிவைத்து பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாக மாணவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
11/04/2025 Duração: 08minமுன்னாள் அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது; அமெரிக்காவின் அதிகரித்த வரி விதிப்பு தொடர்பில் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சீனா மீதான வரியை அமெரிக்கா 145 சதமாக உயர்த்தியது!
11/04/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
பேராசிரியராக இருந்த நான் ஏன் துப்புரவுத் தொழிலாளியாக மாறினேன்? - ரயீஸ் முகமது
10/04/2025 Duração: 14minதமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் முனைவர் ரயீஸ் முகமது அவர்கள். தூய்மைப் பணி தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட அவர், பின்னர் அதே தூய்மைப் பணியில் இறங்கினார். Kotagiri Septic Tank Cleaning Services என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ரயீஸ் முகமது, தலித் கேமரா எனும் சமூக ஊடக முன்னெடுப்பின் மூலமாகவும் அறியப்படுகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் தென்னாப்பிரிக்காவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளராகவும் பணியாற்றியவர் ரயீஸ் முகமது அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன?
10/04/2025 Duração: 13minவிலைவாசி உயர்வு என்பது அனைத்து கட்சிகளாலும், சுயேட்சை உறுப்பினர்களாலும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் Cost of Living எனப்படும் விலைவாசி உயர்வு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிவரும் முரளி அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
What’s Australia really like for migrants with disability? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?
10/04/2025 Duração: 07minDisability advocates and experts say cultural stigma and migration laws leave migrants living with disability further excluded and marginalised. - மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது.
-
லேபரின் சோலார் பேட்டரி கொள்கையும், பிற கட்சிகளின் எரிசக்தி கொள்கையும்
10/04/2025 Duração: 07minலேபர் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வீடுகளில் சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரிகளை ஒருவர் வாங்கும்போது அரசு 30% மானியம் வழங்கும் என்று லேபர் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் எரிசக்தி விலை குறைப்பில் லிபரல்-நேஷனல் எனும் Coalitionயின் பார்வை, கிரீன்ஸ் கட்சியின் பார்வை என்ற தகவல்களோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சி.
-
மறைந்தார் குமரி அனந்தன்: 2011 ஆண்டில் SBS தமிழில் படைத்த இலக்கிய விருந்து!
10/04/2025 Duração: 13minகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்; தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டவர். இந்திய நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசி சாதனை படைத்தவர் குமரி அனந்தன் அவர்கள். அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2011 ஆம் ஆண்டு இலக்கிய விருந்து படைக்கும் நேர்முகம் ஒன்றை தொலைபேசி வழி வழங்கியிருந்தார். அந்த நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவில் புறா வளர்த்து, (புறா) பறக்கும் போட்டியில் வெற்றிபெறும் தமிழர்
10/04/2025 Duração: 12minவீடுகளில் பலர் நாய் பூனை மீன் போன்றவற்றை வளர்ப்பதை நாம் அறிவோம்... ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Rockhampton என்ற இடத்தில் வசிக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் இளைஞர், புறா வளர்க்கிறார். அது மட்டுமன்றி அந்தப் புறாக்கள் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயிற்சியும் கொடுக்கிறார். புறா வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் 2021ஆம் ஆண்டு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
குழந்தைப் பராமரிப்பு மையங்களில் முறைக்கேடுகள் : விசாரணை தேவை - கிரீன்ஸ்
10/04/2025 Duração: 08minChild care குழந்தைப் பராமரிப்புத் துறையில் நிலவும் பிரச்சனைகளை சமீபத்திய புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியதை தொடர்ந்து குழந்தைப் பராமரிப்புத் துறை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணை தேவை என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Tallulah Brassil ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
நாடுகளுக்கு வரிவிதிப்பிலிருந்து 90 நாட்களுக்கு விலக்கு, ஆனால் சீனாவுக்கு வரி அதிகாரிப்பு - Trump
10/04/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: பிரதமர் Anthony Albanese
09/04/2025 Duração: 05min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் பிரதமர் Anthony Albanese பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
09/04/2025 Duração: 08minதமிழக ஆளுநர் தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை; மத்திய பிரதேசத்தில் பாதிரியர்கள் மீது தாக்குதல்; தொடரும் வக்பு வாரிய மசோதா விவாதம், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விவாதம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பாட வருகிறார் தேவக்கோட்டை அபிராமி!
09/04/2025 Duração: 06minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் தேவக்கோட்டை அபிராமி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Coalition ஆட்சியில் சர்வதேச மாணவர் எண்ணிக்கை 80 ஆயிரத்தால் குறைக்கப்படும்- Dutton அறிவிப்பு
09/04/2025 Duração: 07minதாம் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தால் குறைக்கப்படும் என Coalition- எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.