Sbs Tamil - Sbs
மறைந்தார் குமரி அனந்தன்: 2011 ஆண்டில் SBS தமிழில் படைத்த இலக்கிய விருந்து!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:13:47
- Mais informações
Informações:
Sinopse
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்; தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டவர். இந்திய நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசி சாதனை படைத்தவர் குமரி அனந்தன் அவர்கள். அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2011 ஆம் ஆண்டு இலக்கிய விருந்து படைக்கும் நேர்முகம் ஒன்றை தொலைபேசி வழி வழங்கியிருந்தார். அந்த நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.