Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 49:04:35
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் வீழ்ச்சி- காரணம் என்ன?

    22/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி இரண்டாண்டுகளில் மிகவும் குறைந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

    22/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் பிரச்சாரங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயமும் பேசுபொருளாகியுள்ள பின்னணியில், இதுதொடர்பில் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டணி அரசியல் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How to choose the right tutor for your child - உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான தனியார் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது எப்படி?

    22/03/2025 Duração: 11min

    Tutoring is a booming industry in Australia, with over 80,000 tutors nationwide. Migrant families often spend big on tutoring, seeing education as the key to success. However, choosing the right tutor is essential to ensure a positive experience and real benefits for your child. - தனியார் பயிற்சி என்பது இந் நாட்டில் ஒரு பெரிய, மற்றும் வளர்ந்து வரும் துறையாகும், நாடு முழுவதும் 80,000ற்கும் மேற்பட்ட தனியார் பயிற்சியாளர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும்பாலும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்காக அதிக பணம் செலவு செய்கின்றன. வெற்றிக்கான திறவுகோலாகக் கல்வியை அவர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மையிலேயே பயனடையவும் நேர்மறையான அனுபவத்தை உருவாக்கவும், உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான ஒரு தனியார் பயிற்சியாளரைக் கண்டுபிடிப்பது மிக அவசியம்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    21/03/2025 Duração: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று ஏன் பெரியார் கூறினார்? – கி. வீரமணி பதில்

    21/03/2025 Duração: 16min

    திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் நிறைவுப்பாகம் இது.

  • ஆஸ்திரேலியாவில் வாடகை வீட்டைப் பெறுவதற்கு $130,000 வருமானம் தேவை - ஆய்வு

    21/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் ஒருவர் நிதி அழுத்தத்திற்கு ஆளாகாமல் தனக்கான வாடகை வீட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவர் ஆண்டுக்கு 130,000 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும் என்று புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவிலிருந்து பல்லிகளை கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவருக்கு சிறை!

    21/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு பல்லிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மெல்பனில் இறந்தவரின் விரல்களை விற்க முயன்ற பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

    21/03/2025 Duração: 06min

    விக்டோரியா மாநிலத்தில் விலங்குகள் காப்பகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் இறந்த ஆண் ஒருவரின் கால் விரல்களை இணையத்தில் விற்க முயற்சி செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் மயிரிழையில் சிறை தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    21/03/2025 Duração: 08min

    கொழும்பு பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் ரணில் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு; உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு. மலையக மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயற்படும் தோட்ட கம்பனிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதில் 90ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

    21/03/2025 Duração: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 21 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • விமானம் ரத்து/தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க சட்டம் வந்தால் கட்டணம் உயரும் - விமான நிறுவனங்கள்

    20/03/2025 Duração: 06min

    விமானம் ரத்து செய்யப்படும் போது அல்லது தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவு மீதான நாடாளுமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. நட்ட ஈடு வழங்குவதற்கான சட்டம் வந்தால் விமானக் கட்டணம் உயரும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Tanya Dendrinos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை விரிவுபடுத்தியுள்ள Qantas!

    20/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவிற்கு விமானம் அல்லது கப்பலில் வருபவர்கள், தமது தங்குமிடம் மற்றும் நாட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை தெரிவிக்கும், Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையை Qantas நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

    20/03/2025 Duração: 02min

    உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் என்று பட்டியல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?

    20/03/2025 Duração: 05min

    அறிவியல் தகவலை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவரும் SciNirosh அவர்கள் உடல் எடையை குறைக்கும் சில வழிகளையும், தந்திரங்களையும் பகிர்ந்துகொள்கிறார். இது முதலில் 2016 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது.

  • குற்றவாளியை நாடுகடத்த அரசுக்கு அதிகாரம் வழங்க கருத்து தேர்தல் - எதிர்கட்சித்தலைவர் டட்டன் யோசனை

    20/03/2025 Duração: 07min

    நாட்டில் கடுமையான குற்றம் செய்து தண்டிக்கப்படுகின்றவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் இரட்டை குடியுரிமையுள்ளவர்களாக இருந்தால், அந்த குற்றவாளியிடமிருந்து குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதை நிறுவ Referendum கருத்து தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் முன்வைத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள்

    20/03/2025 Duração: 09min

    தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை; டாஸ்மாக் முறைகேடு-தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்; நாக்பூரில் வன்முறை உள்ளிட்ட செய்திகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • அண்மையில் மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் எமக்கு வழங்கிய நேர்காணல்

    20/03/2025 Duração: 24min

    ‘கனவில் உதிர்ந்த பூ’ , ‘ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்’ போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

  • நாட்டில் PBS திட்டத்தில் மருந்துகளின் விலை $25டாலராக குறைகிறது

    20/03/2025 Duração: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்கள்!

    19/03/2025 Duração: 03min

    2025 பெப்ரவரியில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் புதிய தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆட்சிக்கு வந்தால் Citizenship test-இல் புதிய கேள்விகள் சேர்க்கப்படும்: எதிர்க்கட்சி

    19/03/2025 Duração: 02min

    எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் சில புதிய கேள்விகள் சேர்க்கப்படும் என Coalition - எதிர்க்கட்சி கூட்டணி முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 9 de 20