Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 44:54:30
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • குற்றவாளியை நாடுகடத்த அரசுக்கு அதிகாரம் வழங்க கருத்து தேர்தல் - எதிர்கட்சித்தலைவர் டட்டன் யோசனை

    20/03/2025 Duração: 07min

    நாட்டில் கடுமையான குற்றம் செய்து தண்டிக்கப்படுகின்றவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் இரட்டை குடியுரிமையுள்ளவர்களாக இருந்தால், அந்த குற்றவாளியிடமிருந்து குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதை நிறுவ Referendum கருத்து தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் முன்வைத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள்

    20/03/2025 Duração: 09min

    தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை; டாஸ்மாக் முறைகேடு-தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்; நாக்பூரில் வன்முறை உள்ளிட்ட செய்திகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • அண்மையில் மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் எமக்கு வழங்கிய நேர்காணல்

    20/03/2025 Duração: 24min

    ‘கனவில் உதிர்ந்த பூ’ , ‘ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்’ போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

  • நாட்டில் PBS திட்டத்தில் மருந்துகளின் விலை $25டாலராக குறைகிறது

    20/03/2025 Duração: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்கள்!

    19/03/2025 Duração: 03min

    2025 பெப்ரவரியில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் புதிய தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆட்சிக்கு வந்தால் Citizenship test-இல் புதிய கேள்விகள் சேர்க்கப்படும்: எதிர்க்கட்சி

    19/03/2025 Duração: 02min

    எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் சில புதிய கேள்விகள் சேர்க்கப்படும் என Coalition - எதிர்க்கட்சி கூட்டணி முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • The AI Election: Will artificial intelligence influence how Australia votes? - SBS Examines : AI தேர்தல் : ஆஸ்திரேலிய வாக்குகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா?

    19/03/2025 Duração: 07min

    Experts say AI could have significant impacts on democracy and trust. - ஜனநாயகம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையில் செயற்கை நுண்ணறிவு AI குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • பெரியாரின் எழுத்துக்கள் அரசுடைமையாவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறோம்? – கி. வீரமணி பதில்

    19/03/2025 Duração: 16min

    திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் இது.

  • ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தர விசா என்று ஆசைகாட்டும் மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி?

    19/03/2025 Duração: 14min

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கான குடியேற்ற விசா வாங்கித்தருகிறோம் என்று தமிழ்நாட்டில் ஆசைகாட்டும் மோசடி Migration Agents அதிகரித்துவருகின்றனர். இந்த பின்னணியில், இப்படியான மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி என்றும், மக்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்ன என்பதையும், அனுபவங்களோடு விளக்குகிறார் பிரகாஷ் நடராஜன் அவர்கள். நியூசிலாந்து நாட்டிலிருந்துகொண்டு தனது பிரபல YouTube சானல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரகாஷ் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

  • ஆண் நடனக் கலைஞர் இல்லையென்று யார் சொன்னது?

    19/03/2025 Duração: 08min

    ஆய்வுகள் காட்டுவது போல், நடனத்தில் பெண்களின் பங்கேற்பு ஆண்களை விட மிக அதிகம், சில அறிக்கைகள் ஆஸ்திரேலியாவில் நடனக் கலைஞர்களில் சுமார் 89% பெண்கள் என்று கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தென்னிந்திய சமூகத்தினரிடையே புள்ளிவிவரங்கள் இன்னும் துருவப்படுத்தப்பட்டுள்ளன. பவஜன் குமார் ஒரு உணர்திறன் மிக்க பரதநாட்டிய நடனக் கலைஞர், வசீகரிக்கும் மேடை இருப்பு மற்றும் இயக்கத்தில் துல்லியம் கொண்டவர். அவர் கலை வடிவத்தைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலைக் கொண்ட ஒரு இயற்கை கலைஞர். லீலா சாம்சனின் சீடரான பவஜன், தனது குருவின் தனித்துவமான பாணியின் நுட்பமான நுணுக்கங்களை உள்வாங்குவது மட்டுமல்லாமல், கலையின் நுணுக்கங்களைக் கண்டறியவும் ஆர்வமாக உள்ளார், மேலும் அதன் அழகியல் மற்றும் ஆன்மீக அழகைக் கடைப்பிடிக்க பாடுபடுகிறார். கனடாவைச் சேர்ந்த ஆண் நடனக் கலைஞர் பவஜன் குமாருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்தும் நேர்காணல்.

  • Alfred சூறாவளி & புதிய அமெரிக்க வரி பெடரல் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தும்!

    18/03/2025 Duração: 08min

    லேபர் அரசின் நான்காவது பெடரல் பட்ஜெட் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அரசின் செலவுகள் குறித்து நேற்று Queensland Media Club-இல் கருவூலக்காப்பாளர் Jim Chalmers உரையாற்றினார். அப்போது எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் பற்றாகுறை இருக்கும் என்று கூறினார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.

  • உக்ரைன் போர் நிறுத்ததிற்கு ரஷ்யா ஒப்புதல் - ஆனால் முழுமையாக தாக்குதலை நிறுத்த மாட்டோம்!

    18/03/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • புதிய $5 நாணயத்தாள்: மன்னரின் உருவம் இடம்பெறாது! பூர்வீகக் குடிமக்களுக்கு முன்னுரிமை!!

    18/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் $5 நாணயத்தாளின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதிலிருக்கும் மகாராணியின் உருவப்படத்திற்கு பதிலாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நாட்டுடன் கொண்டுள்ள உறவை கொண்டாடும் ஒரு புதிய வடிவமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வெப்பம் அதிகரிப்பதால் இதயநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது- ஆஸ்திரேலிய ஆய்வு

    18/03/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்புக்களில் 7.3 சதவீதத்திற்கு தீவிர வெப்ப அலைகள் காரணமாகின்றன என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NSW-இல் கடந்த ஆண்டு மிகவும் அதிகமாக மொத்தம் 85 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

    18/03/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • கட்டுமானப் பணியில் ஈடுபடும் சிலருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் அபாயம்

    17/03/2025 Duração: 03min

    Engineered stone தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதனை ஆஸ்திரேலியா தடை செய்தது. தற்போது சிட்னியில் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சுமார் 13 பேர் இந்த கொடிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • “சிறு வயதிலேயே திராவிடர் கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன்” - கி. வீரமணி

    17/03/2025 Duração: 16min

    திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் முதல் பாகம் இது.

  • இரத்த தானம் செய்வதில் நமது நலமும் கலந்துள்ளது. எப்படி?

    17/03/2025 Duração: 13min

    குடியேற்றவாசிகள் இரத்த தானம் செய்ய எளிதாக முன்வருவதில்லை என்றும், இதற்கு அவர்களிடம் இருக்கும் தவறான புரிதல்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் இரத்த தானம் செய்வதில் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், ஒருவரின் உடல் நலம் எப்படி இரத்த தானம் மூலம் மேம்படுகிறது என்றும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

  • “தவறான சாக்குப்போக்குகளின்” கீழ் Labor கட்சி சில கட்டாய தண்டனைச் சட்டங்களை அவசரமாக இயற்றியதா?

    17/03/2025 Duração: 06min

    Duralலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நிறைந்த Carvan ஒரு குற்றவியல் மோசடி வேலை என்று விசாரணைகளின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசு அதி தீவிர சட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றும், அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் Greens கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    17/03/2025 Duração: 10min

    இந்திய மற்றும் இலங்கை பக்தா்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது, தமிழக அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தும் தமிழக நிதிநிலை அறிக்கை 2025 மற்றும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் உறவில் விரிசல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

página 8 de 18