Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
உங்களுக்கு எல்லாமாய் இது!
03/04/2025 Duração: 12minமனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி, முதியவர்களுக்கும் புனர்வாழ்வு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்த ஒரு சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை 2018ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
இறந்தவர்களின் superannuation நிதியை திரும்ப தருவதில் ஏன் தாமதம்? - ASIC கேள்வி
03/04/2025 Duração: 06minSuperannuation துறையில் claim விண்ணப்பங்கள் பரிசீலனையில் நிலவும் கூடுதலான தாமதங்கள் மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை போன்றவை சமீபத்திய ASIC-இன் மதிப்பாய்வு அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் 34 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
03/04/2025 Duração: 09minஇந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, திருப்பூரில் கல்லூரி மாணவி ஆணவப்படுகொலை, கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு உள்ளிட்ட உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
புகலிடக் கோரிக்கையாளர் இருவரின் முறையீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
03/04/2025 Duração: 07minஇரு புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை அகதி என்று Adminstrative Appeal Tribunal (AAT ) ஏற்றுக்கொண்ட பிறகும் தாங்கள் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்குகள் நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய பொருட்களுக்கும் புதிய வரியை அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்தார்!
03/04/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மியான்மார் நிலநடுக்கம்: நடந்ததையும், நடக்கவேண்டியதையும் விவரிக்கிறார் பர்மிய தமிழர்!
02/04/2025 Duração: 08minமியான்மார் (பர்மா) நாட்டில் கடந்த வாரம் நடந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். மண்டலே பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய எதிர்பார்ப்பையும் விவரிக்கிறார் 74 வயது அப்பாவு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது?
02/04/2025 Duração: 16minHeavy menstrual bleeding எனப்படும் அதீத இரத்தப்போக்கு காரணமாக அவதிப்படும் பெண்கள் பலர் உள்ளனர். கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதிலுள்ள பெண்களில் நான்கில் ஒருவர் இத்தகைய நிலைமையினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Women’s Health Road Australia Incorporated (WHRAI)இன் ஏற்பாட்டில் மே 11ஆம் திகதி International Heavy Menstrual Bleeding தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் Heavy Menstrual Bleeding தொடர்பில் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப நல மருத்துவராக கடமையாற்றும் வாணி அர்ஜுனமணி அவர்கள். கூடவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட் காயத்ரி ஸ்ரீதர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். இவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தனிப்பட்ட ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
Australian makes history by living with a Titanium heart - உலோக இதயத்துடன் வாழ வைத்து உலக வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா!
02/04/2025 Duração: 16minTotal artificial heart was implanted by an Australian doctor on a patient who made history to be the first person in the world to leave hospital with a titanium heart. The patient lived with the device for more than 100 days before receiving a donor heart transplant. - உலகிலேயே முதல் தடவையாக, ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரால் முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, டைட்டேனிய உலோகத்தாலான இதயத்துடன் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி வரலாறு படைத்துள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு ஒரு நன்கொடையாளரின் இதயம் கிடைக்கும் வரை, இந்த நோயாளி 100 நாட்களுக்கும் மேலாக அந்த செயற்கை இதயத்துடன் வாழ்ந்துள்ளார். இது குறித்து, விக்டோரியா மாநிலத்தின் Austin Health இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இதய அறுவை சிகிச்சை இயக்குனரும் St John of God Geelong, Epworth Eastern மற்றும் Epworth Richmond மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் கடமையாற்றும் Dr சிவேன் சீவநாயகம் அவர்களிடம் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.
-
ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமையுமா?
02/04/2025 Duração: 06minநாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் இதையொட்டி பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பின்படி நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அமெரிக்க அதிபர் Donald Trump கூடுதல் வர்த்தக வரிகளை அறிவிக்கவுள்ளார்!
02/04/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
01/04/2025 Duração: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் நான் றேனுகா துரைசிங்கம்.
-
குயின்ஸ்லாந்தில் சாலை விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிப்பு!
01/04/2025 Duração: 02minகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதங்கள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டில் மீண்டும் வீடுகளின் விலை அதிகரிப்பு!
31/03/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்?
31/03/2025 Duração: 07minThe government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கின !
31/03/2025 Duração: 09minநாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
31/03/2025 Duração: 10minசத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை, திமுக Vs தவெக - முற்றி வரும் மோதல், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
நாட்டில் லேபர்கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு முடிவு
31/03/2025 Duração: 03minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 31 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – சுய இன்பம்
30/03/2025 Duração: 13minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரின் மூன்றாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
ரமலான் தரும் செய்தியும், இஸ்லாமியர்களின் தற்போதைய சவால்களும்!
30/03/2025 Duração: 18minரமலான் குறித்த சிறப்பு கலந்துரையாடல். ரமலான் உலகுக்கு தரும் செய்தி, ரமலான் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்-முஸ்லீம் அடையாளம், நோன்பு நாட்களில் முஸ்லீம்கள் வேலைத் தளங்களில் எதிர்கொள்ளும் சவால், Islamophobia எனப்படும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக நாட்டில் அதிகரிக்கும் போக்கு என்று பல அம்சங்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: ஹாலித் முஹம்மது, ஷாபாத் அஹமத், பீமா ஜான் யூசுப், ஆபிதா ஷாஹற், ரைஸ் இஸ்மாயில், பஷீர் ஆகமது, சித்தி பர்ஸானா, ஷஹ்பான் அலி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
How far can you legally go to protect yourself from robbery in Australia? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
30/03/2025 Duração: 10minIn Australia, robbery isn't just theft; it has specific legal definitions and consequences. This episode of Australia Explained podcast explores the types of crimes, including stealing. What does it mean legally? How can you protect yourself? And what support is available if it happens to you? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும், Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.