Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
Starlink சேவை குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?
10/02/2025 Duração: 06minStarlink சேவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர், Elon Musk. உலகின் மிகப் பெரிய பணக்காரர். தற்போது, அமெரிக்க அதிபர் Donald Trump இன் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர். அவரது நிறுவனமான Starlink வழங்கும் இணைய சேவையை ஆஸ்திரேலியர்கள் நம்பியிருப்பது குறித்து சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
10/02/2025 Duração: 11minடெல்லி தேர்தலில் பாஜக அபார வெற்றி! 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னணி, தமிழக ஆளுநர் ரவிக்கு 12 மசோதாக்களை நிறுத்தியது ஏன் என்று இந்தியா உச்சநீதிமன்றம் கடும் கண்டனம், ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுக அமோக வெற்றி மற்றும் கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வென்றது ஆஸ்திரேலியா
10/02/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 10/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
07/02/2025 Duração: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 பிப்ரவரி – 08 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 08 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.
-
Are you breaching copyright when using social media? - சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதிப்புரிமையை மீறுகிறீர்களா?
07/02/2025 Duração: 10minHave you ever shared someone else’s video or music on social media without their permission? Chances are you were infringing their copyright. Understanding how copyright is applied will help you avoid awkward situations and potentially serious consequences. - வேறொருவரின் வீடியோ அல்லது இசையை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்களா? நீங்கள் அவர்களின் பதிப்புரிமையை மீறியிருக்கலாம்.
-
மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்
07/02/2025 Duração: 09minசர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரது தனித்துவமான பாணி தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய மரபுகளை துணிச்சலாக இணைக்கிறது.
-
தீவிரவாதத்தை எதிர்க்கவும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் சிட்னி மேயர்கள் ஒன்றுபடுகிறார்கள்
07/02/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
06/02/2025 Duração: 08minமிக எளிமையான முறையில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினம், வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டம்,வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை-இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
அரச வாகனத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியதால் பதவியிழந்த அமைச்சர்!
06/02/2025 Duração: 06minNSW மாநிலத்தில் அரச வாகனத்தை சொந்தக் தேவைகளுக்கு பயன்படுத்தியதால் அம்மாநில போக்குவரத்துக்கு அமைச்சர் Jo Haylen கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
மனநல மருத்துவ அமைப்பில் நிலவும் அழுத்தங்களினால் பாதிக்கப்படும் இளைஞர்கள்!
06/02/2025 Duração: 05minமனநல சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை சமாளிக்க நாட்டில் உள்ள மனநல அமைப்பு போராடி வரும் நிலையில் இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Gabrielle Katanasho எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
"பாரதி உயிரோடு இருந்தால், தமிழ்நாட்டில் அனைத்தும் தமிழ்மயமாகியிருக்கும்."
06/02/2025 Duração: 22minமகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத்தாளர் இளசை மணியன் அவர்கள் மகாகவி பாரதி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
-
Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க MasterCard-இன் புதிய திட்டம்!
06/02/2025 Duração: 06minCredit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க 2030-ஆம் ஆண்டிற்குள் கார்டுகளில் இருந்து 16 இலக்க எண்ணை அகற்றும் திட்டத்தை MasterCard அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
உணவு பழக்கங்களினால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியுமா?
06/02/2025 Duração: 10minதலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.
-
“தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர்
06/02/2025 Duração: 06minதமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வீரமாமுனிவர் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை போதிக்க தமிழகம் வந்த அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டு நிகழ்த்திய சாதனைகளும், பங்களிப்பும் அளப்பெரிது. ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றிய காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
சிட்னி பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் நன்கொடை வழங்கி சாதனை படைத்த பில்லியனர்
06/02/2025 Duração: 02minஅறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம்பெறும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த ஏதுவாக, சிட்னி பல்கலைக்கழகத்திற்கு வரலாற்றுச் சாதனைத் தொகையான 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையை Robin Khuda என்ற பில்லியனர் வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
யூத எதிர்ப்பு நடவடிக்கைக் குற்றங்களுக்கு சிறைத்தண்டனை - பெடரல் அரசு ஒப்புதல்!
06/02/2025 Duração: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 06/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Seatbelt அபராதங்கள் மூலம் ஆறு மாதங்களில் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டிய NSW அரசு
05/02/2025 Duração: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த ஆறு மாதங்களில் ஆசனப்பட்டி -சீட் பெல்ட் தொடர்பான அபராதங்கள் மூலம் சுமார் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Medicare திட்டம் காலாவதியான ஒன்றா?
05/02/2025 Duração: 07minஆஸ்திரேலியாவின் Medicare கட்டமைப்பு காலாவதியானது என்றும், இன்றைய நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நாட்டின் உச்ச மருத்துவ அமைப்பு Australian Medical Association தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு!
05/02/2025 Duração: 08minசிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 - ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்து விரிவாக உரையாடுகிறார்கள் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு கர்ணன் சிதம்பரபாரதி மற்றும் செயலாளர் திரு அனகன் பாபு. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
-
இந்திய நிதிநிலை அறிக்கை, மீனவர்கள் கைது & இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்
05/02/2025 Duração: 08minஇந்திய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், தொடரும் தமிழக மீனவர்கள் கைது மற்றும் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.